தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தீயணைப்பு அதிகாரிக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தீயணைப்பு அதிகாரிக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

சிங்கப்பூரின் தென்மேற்கே நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பற்றி கொண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயை அணைப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் Marine தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறியது.

 

என்ஜின் அறையில் புகை வந்ததாக கூறப்படுகிறது.அந்த அறைக்குள் தீயணைப்பாளர்களில் இருவர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

மற்ற தீயணைப்பாளர்கள் உள்ளே நுழைந்த போது இருவரில் ஒருவர் தரையில் கிடந்ததைக் கண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.

அதிகாரி சுயநினைவுடன் இருந்ததாகவும் பிறகு சுயநினைவை இழந்ததாக கூறியது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அதிகாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.அவருக்கு வயது 30.

இறந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.அவரது குடும்பத்தினருக்கு முழு ஆதரவும் வழங்குவதாக தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.