சிங்கப்பூரின் நான்காவது பிரதமர்!!

சிங்கப்பூரின் நான்காவது பிரதமர்!!

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு.லாரன்ஸ் வோங் அவர்கள் நேற்று(மே 15) பதவியேற்றார்.

பதவியேற்பு சடங்கு இஸ்தானாவில் இரவு 8 மணியளவில் தொடங்கியது.

இந்த விழாவில் பல்வேறு உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியைக் காண சுமார் 870 பேர் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிபர் திரு. தர்மன் சண்முகரத்னம் உரையாற்றினார்.

கடந்த 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கையையே நாட்டிற்காக அர்ப்பணித்த திரு.லீ அவர்களுக்கு முதலில் தனது நன்றியைத் தெரிவித்தார்.

லீ பதவியேற்று கொண்ட போது அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் பிரதமராக இருப்பேன் என்ற உறுதிமொழியைச் செயலில் செய்து காட்டியவர் என்று புகழாரம் சூட்டினார்.

இக்கட்டான காலக்கட்டங்களில் சமூகம் பிளவுபடாமல் பார்த்து கொண்டவர் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் ஆற்றிய சேவைகளைப் பற்றி பேசினார்.

பிரதமர் பொறுப்பு திரு. லாரன்ஸ் வோங் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு புதிய அத்தியாயம் சிங்கப்பூர் வரலாற்றில் தொடங்கி உள்ளதாக சிங்கப்பூர் அதிபர் திரு. தர்மன் சண்முகரத்னம் கூறினார்.

சிங்கப்பூரர்கள் இந்த புதிய தலைமைத்துவத்தை உறுதியுடன் நம்பலாம் என்று கூறினார். சிறந்த தலைமையத்துவத்திடம் சிங்கப்பூர் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.