கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!!
மே 12-ஆம் தேதி அன்று பேராக்கின் தாபாவில் பெய்த கனமழையால் மலேசியா மாநிலத்தில் உள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நீர்வீழ்ச்சிகள், Lata Ishkandar மற்றும் Lata Kinjang பிரபலமான சுற்றுலாத் தலமான கேமரன் ஹைலேண்ட்ஸுக்கு அருகில் உள்ளது.
Lata Kinjang Forest Eco-Park இல் ஏராளமான சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதை தீயணைப்பு வீரர்களுக்கு தெரியவந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.
அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய மீட்புக் குழுவினர் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
மே 12ம் தேதி இரவு முதல் கம்பர் மற்றும் தாபாவில் மழை பெய்து வருகிறது.
கம்பர் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், மக்கள் வெளியேறும் அளவிற்கு திடீர் வெள்ளம் இல்லை என்று கூறப்பட்டது.
நீர்வீழ்ச்சிகளில் அதிகளவில் நீர் ஓடுவதை கண்காணித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg