மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!!

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!!

இந்தியாவின் உள்ள மும்பையில் கடந்த மே 13-ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் காற்றின் போது மிகப்பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது.

காட்கோபர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பெட்ரோல் பங்க் மீது விளம்பர பலகை விழுந்தது.100 க்கும் மேற்பட்டோர் விளம்பர பலகையின் கீழ் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.75 பேர் காயமடைந்தனர்.

தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புப் பிரிவினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சிக்கியவர்களைக் காப்பாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் என உள்ளூர் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமானங்கள் திருப்பிவிடப்பட்டு, தற்காலிகமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் மும்பை அடிக்கடி இத்தகைய அபாயங்களை எதிர்கொள்கிறது.