சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம். சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் படிப்படியாக உயரும் சம்பளம் முறையைப் பின்பற்றுவதற்கென குறியீடு இருக்கிறது. குறியீட்டை 1900 நிறுவனங்கள் பெற்றுள்ளது. இக்குறியீடு குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது.
சான்றளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குறியீடு பச்சை, மஞ்சள் நிறங்களைக் கொண்டதாக இருக்கும். நிறுவனங்களில் பணி புரியும் குறைந்த வருமானம் வாங்கும் ஊழியர்களுக்கு சம்பளம் முறையை படிப்படியாக உயர்த்தும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு 76,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதி பெறுகின்றது. இத்திட்டத்திற்கு தகுதி பெற, நிறுவனங்கள் ஒரு சிங்கப்பூரர் ஊழியருக்கு படிப்படியாக உயரும் சம்பள முறையில் அளித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளத் தொகையான 1400 வெள்ளி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இத்தகுதிகளின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு குறியீடு வழங்கப்படும். இத்திட்டத்தால் கிட்டத்தட்ட 2,34,000 ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.