இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் இந்தோனேஷியா மக்கள்!! பலி எண்ணிக்கை உயருமா?

இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் இந்தோனேஷியா மக்கள்!! பலி எண்ணிக்கை உயருமா?

மேற்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளால் ஏராளமான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சுமத்ரா தீவில் மே 11-ஆம் தேதி அன்று கனமழையால் எரிமலையில் இருந்து பெரிய பாறைகள் இரண்டு பகுதிகளாக உருண்டன.

இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் மசூதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

துரதிர்ஷ்டவசமாக, 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போனவர்களைக் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பலர் பள்ளிகள் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் கிட்டத்தட்ட 84 வீடுகள், 16 பாலங்கள், 2 மசூதிகள் மற்றும் 20 ஹெக்டேர் நெற்பயிர்கள் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் குழு தெரிவித்துள்ளது.

மழைக்காலத்தில் இந்தோனேசியா அடிக்கடி இத்தகைய பேரழிவுகளை சந்திக்கிறது என்று அதிகாரிகள் கூறினர்.