சிங்கப்பூருக்கு 2024 ஆண்டில் டெஸ்ட் அடித்து செல்வதற்கு எவ்வளவு செலவாகும்? என்பதை பற்றி பார்ப்போமா!!
சிங்கப்பூருக்கு செல்ல பல பாஸ்கள் உள்ளன. அதில் ஒன்று Work Permit. Work Permit இல் செல்ல டெஸ்ட் அடித்திருக்க வேண்டும். தற்போ வரை டெஸ்ட் சென்டர்கள் திறக்கப்படவில்லை.இன்னும் ஒரு சில மாதங்களில் திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில டெஸ்ட் சென்டர்கள் குறைவான நபர்களை வைத்து டெஸ்ட் அடிக்கின்றனர். மேலும் அவர்கள் மெயின் டெஸ்ட் ஹைதராபாத் சென்று அடிக்கின்றனர்.
டெஸ்ட் அடிப்பதற்கு எவ்வளவு செலவாகும்?
டெஸ்ட் அடிப்பதற்கு முன்பதிவு செய்வதற்கு குறைந்தது 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாண்டின் மே மாதத்தில் நீங்கள் டெஸ்ட் அடிக்க செல்வதற்கு சுமார் 3,50,000 செலவாகும். இந்த தொகை டெஸ்ட் அடிப்பதற்கு மட்டும். மேலும் நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு தனியாக பணம் கட்ட வேண்டும். இன்ஸ்டிடியூட்ஸ்களில் நீங்கள் டெஸ்ட் அடித்தபின் அவர்களே கம்பெனிகளையும் தேர்வு செய்து கொடுக்கின்றனர். இதற்கு தனிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு சுமார் 4,70,000 வரை செலவாகும்.அது மட்டும் இல்லாமல் டிக்கெட் எடுப்பதற்கான செலவும் உங்களுடையதாக இருக்கும்.
இவ்வளவு பணம் செலுத்தி சிங்கப்பூருக்கு செல்ல வேண்டுமா? என்பதை நீங்கள் சற்று சிந்தித்து செயல்படுங்கள்.நீங்கள் செலவு செய்த தொகையை குறைந்தது 6 மாதங்களுக்குள் எடுத்து விடலாமா? என்று யோசியுங்கள்.
Work Permit இல் செல்பவர்களுக்கு குறைந்தது Basic சம்பளம் $20 கொடுப்பார்கள். மேலும் ஓவர் டைம் 1.5 இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்து நீங்கள் எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு அங்கு மாதத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளலாம்.உங்களுக்கு கிடைக்க போகிற சம்பளத்தை வைத்து உங்களால் அங்கு சமாளிக்க முடியுமா என்பதை யோசித்து,அதன் பிறகு சிங்கப்பூர் செல்வதைப் பற்றி யோசனை செய்யுங்கள்.
நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்காக கடன் வாங்கி உள்ளீர்கள் என்றால் அதனை அங்கு நீங்கள் பெறும் சம்பளத்தை வைத்து குறைந்தது 1 வருடங்களுக்குள் அடைத்து விடலாமா என்று யோசியுங்கள்.
நீங்கள் கடன் வாங்காமல் உங்கள் பணத்தை வைத்து சிங்கப்பூருக்கு சென்றால் எளிதாக கட்டிய பணத்தை சம்பாதித்து விடலாம். Work Permit இல் செல்வதற்கு கட்டணம் அதிகம் என்று நினைப்பவர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்து நீங்கள் சிங்கப்பூருக்கு செல்லலாம். இதைத் தவிர்த்து மற்ற பாஸ்கள் மூலம் சிங்கப்பூருக்கு செல்ல முயற்சி செய்தால் அதற்கு செலவு அதிகம். அதற்கேற்ப சம்பளமும் கிடைக்கும்.கடன் வாங்கி சென்றீருந்தால் அதனை கட்டி விடலாம்.
நீங்கள் குறைவாக பணம் செலுத்தி சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று நினைத்தால் PCM Permit, Shipyard Permit மூலம் செல்லலாம்.
நீங்கள் டெஸ்ட் அடிப்பதற்கு அட்மிஷன் போட்டு அதற்கு காத்திருக்கும் நேரம் ஒரு வருடமாக இருந்தால் நீங்கள் டெஸ்ட் அடிக்க செல்லும் போது கூடுதலாக பணம் வாங்க வாய்ப்புள்ளது. கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, நீங்கள் அனைத்தையும் நன்கு யோசித்து சிங்கப்பூர் செல்வது நல்லது.தற்போது நிலவும் சூழலில் டெஸ்ட் அடித்து செல்வது சரியா என்பதை சற்று சிந்தியுங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg