சிங்கப்பூரில் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!! முறையான உரிமம் இல்லையெனில் அபராதம் நிச்சயம்!!

சிங்கப்பூரில் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!! முறையான உரிமம் இல்லையெனில் அபராதம் நிச்சயம்!!

சிங்கப்பூரில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பூனைகளை வளர்ப்பதற்கு உரிமம் பெற வேண்டும் என்ற திட்டம் அமலுக்கு வருகிறது.
பூனை உரிமையாளர்கள் பூனைகளுக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் மைக்ரோசிப்பிங் பொருத்திருக்க வேண்டும்.

அதை பெறுவதற்காக இரண்டு ஆண்டு காலம் அவகாசம் கொடுத்துள்ளனர்.

HDB பிளாட்களில் இருப்பவர்கள் அதிகபட்சம் 2 பூனைகளை வைத்துக்கொள்ளலாம்.

தனியார் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிகபட்சம் மூன்று பூனைகள் அல்லது 3 நாய்கள் வைத்துக்கொள்ளலாம்.

உரிமத்தைப் பெற AVS இன் பெட் அனிமல் லைசென்சிங் சிஸ்டம் போர்டல் மூலமாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெறலாம்.

செப்டம்பர் 1-ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு வரை உரிமத்தைப் பெற கட்டணம் இல்லை.

முறையான உரிமம் இல்லாதவர்களுக்கு $5000 அபராதம் விதிக்கப்படும்.