சிங்கப்பூரில் நான்காவது பிரதமராக பதவியேற்க உள்ள லாரன்ஸ் வோங் - யின் பேட்டி!!
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக வரும் மே 15-ஆம் தேதி பதவியேற்க உள்ள துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தி இக்கனோமிஸ்ட் நாளிதழுக்கு பேட்டியளித்தார்.
சவாலான பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், சிங்கப்பூர் முன்னோடி தலைவர்கள் போல் முடிவு எடுப்பேன் என்று பேட்டியில் தெரிவித்தார்.
அந்த சவாலான பிரச்சனைகள் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களின் நலனுடன் சமந்தப்பட்டதாக இருந்தால் நிச்சயமாக தயங்காமல் அவை குறித்து முடிவெடுப்பது உறுதி என்று
கூறினார்.
சிங்கப்பூரை யார் ஆட்சி செய்தாலும் துணிச்சலுடன் முடிவு எடுக்கும் குணம் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ கூறியுள்ளார் என்பதை நினைவு கூர்ந்தார்.
அவரிடம் பேட்டியாளர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
உறுதியான முடிவை எடுப்பவராக இருந்த கொண்டு மக்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் தான் சொல்வதை கேட்கும்படி மக்களை வற்புறுத்தும் தலைவராக இருப்பீர்களா என்று கேட்கப்பட்டது.
நான் அனைவரின் கருத்துகளை கவனமாக கேட்பேன்.எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் இருக்க மாட்டேன். மற்றவர்களின் புரிதலுக்கும் நுண்ணறிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தலைவராக இருப்பேன்.மேலும் அந்த முடிவு சிங்கப்பூருக்கு நன்மை அளிக்கும் முடிவுகளை எடுப்பேன் என்று பதிலளித்தார்.
ஒரு சில முடிவுகள் மக்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் நாட்டின் நலனுக்காக அவை சரியாக இருந்தால் அவற்றையே தேர்ந்து எடுப்பேன் என்று கூறினார்.
சிங்கப்பூரின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுவதால் அவர்களை தேர்வு செய்கின்றனர்.
மேலும் கட்டுமானம், கடற்துறை போன்ற துறைகளில் சிங்கப்பூரர்கள் வேலை செய்ய விரும்பாத வேலைகளுக்கு வெளிநாட்டவர்களை பணி அமர்த்த வேண்டியிருப்பதாக கூறினார்.
அது மட்டுமின்றி அவர்கள் புதிய திறன்கள் தேவைப்படுகிற வேலைகளுக்கு தேவைப்படுவதாக கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg