சிங்கப்பூரில் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குடிமக்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. பாலர்பள்ளிகளில் 35 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சகம் தெரிவித்தது.
பாலர்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான முன்னுரிமை வருமானம் 4,500 வெள்ளிக்கு உயர்த்தப்பட இருக்கிறது என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்தது. தற்பொழுது இருக்கும் வருமான வரம்பை விட ஆயிரம் வெள்ளி அதிகம்.
குறைந்த அளவு வருமானம் கொண்ட குடும்பங்கள் தனது பிள்ளைகளை பாலர் பள்ளிகளில் சேர்ப்பதற்கு இந்த மாற்றம் உதவியாக இருக்கும். அதனை உறுதி செய்யும். இம்மாற்றம் அடுத்த மாதம் 2023-ஆம் ஆண்டுக்கான பதிவு தொடங்கும் போது அமல்படுத்தப்படும். இவர்கள் புதிய வருமான உச்ச வரம்பிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பாலர்பள்ளியில் சேர்ந்து பயிலும் பிள்ளைகள், பாலர்பள்ளியில் அமைந்திருக்கும் தொடக்கப் பள்ளியில் சேர்வதற்கான முன்னுரிமை பெறுவர். இந்த வருடம் 2023-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கையில் 55 கல்வி அமைச்சகப் பாலர்பள்ளிகள் கலந்துக் கொண்டனர்.