11 பேரிடம் கொள்ளையடித்த கும்பலில் இருவர் கைது!! மற்றவர்களை வலைவீசி தேடிவரும் காவல்துறை!!

11 பேரிடம் கொள்ளையடித்த கும்பலில் இருவர் கைது!! மற்றவர்களை வலைவீசி தேடிவரும் காவல்துறை!!

ஏப்ரல் 18 ஆம் தேதி டுனர்ன் சாலைக்கு அருகிலுள்ள கிங் ஆல்பர்ட் பூங்காவில் உள்ள ஒரு வீட்டில் 11 பேரிடம் இருந்து $4.3 மில்லியன் மதிப்புள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை ஓர் கும்பல் கொள்ளையடித்தது.

இந்த நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களான Goh Boon Tong, 28 மற்றும் முஹம்மது Tauffiq Ahmad Fauzi, 32, ஆகியோர் அவர்களின் சொந்த நாட்டிலேயே கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மே 2ஆம் தேதி அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆயுதம் ஏந்திய நபர்கள் 29 வயது பெண்ணிடம் இருந்து 3.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள ரொக்கத்தை பல்வேறு கரன்சிகளாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

31 வயது ஆடவரிடம் இருந்து $320,000 மதிப்புள்ள கடிகாரத்தையும், $400 மதிப்புள்ள ஃபெராரி கார் சாவியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த கும்பல் கொள்ளையடித்து விட்டு மலேசியாவிற்கு தப்பிச் சென்றனர். ஆனால்,ஏப்ரல் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மற்ற சந்தேக நபர்களை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மே 9 ஆம் தேதி கோ மற்றும் தௌஃபிக் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆயுதமேந்திய கும்பல் கொள்ளையில் அவர்கள் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது குறைந்தது 12 பிரம்படிகள் வழங்கப்படலாம்.