மலேசியாவில் இப்படியும் ஒரு பிரச்சனையா!

மலேசியாவில் இப்படியும் ஒரு பிரச்சனையா!

மலேசியாவில் 24 மணி நேரமும் திறந்திருக்கும் ஒரு சில உணவு கடைகளால் உடல் பருமன் அதிகரிப்பதாக பயனீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் உடல் பருமன் பிரச்சனையை சமாளிக்க 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளில் நேரத்தை குறைக்கும் படி பயனீட்டாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் மெய்தீன் அப்துல் காதர் இதைப் பற்றி கூறும்போது,24 மணி நேரமும் கடை திறந்திருக்கும் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும் என்றும், நள்ளிரவு 12 மணியோடு கடையை மூடும் படியும் அவர் கூறினார்.

ஐந்து ஆண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட தேசிய சுகாதார ஆய்வில் மலேசியாவில் உள்ள மக்கள் 30% க்கு மேற்பட்டோர் உடல் எடை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.