Latest Singapore News in Tamil

பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு!

பாகிஸ்தான் அரசு இந்தியா அரசைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப், இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியும், இன்னும் பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் நேர்மையான முறையில் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு சிற்றரசுகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை மூன்று முறை இந்தியாவும், பாகிஸ்தான் போரிட்டுள்ளது. பிரிட்டன் இடம் விடுதலை பெற்ற பிறகு இப்போர்கள் நடந்துள்ளது. இவற்றில் இரண்டு போர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை காரணம்.

இத்தகையப் போர்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் வேலையிழந்தனர், வறுமையிலும் வாடினர்.இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரைத் தன்னாட்சி உரிமையைத் தன்னாட்சியாக மீட்டுக்கொண்டது. அதன் பின் மூன்று ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பேச்சு வார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பதற்றத்தின் காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இரு நாடுகளும் போர் இன்றி அமைதியுடன் இருக்க வேண்டும் என்று அவர் விருப்பமாக இருப்பதாக தெரிவித்திருத்தார்.