எவரெஸ்ட் `Base camp' ஐ திட்டமிட்ட நாளை விட முன்கூட்டியே சென்றடைந்த 5 வயது சிறுவன்!! சாதனையை முறியடித்த சிறுவன்!!
எவரெஸ்ட் `Base camp’ பகுதியை சிங்கப்பூரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனான அப்யான் இம்தியாஸ் இர்கிஸ் (Abyan Imtiaz Irkiz) ஏப்ரல் 29-ஆம் தேதி அடைந்தார்.சிறுவன் தனது தந்தையான ஸிக்ரி அலியுடன்(Zikri Ali) சென்றடைந்தார்.
அவர்கள் திட்டமிட்ட நாட்களைவிட 2 நாட்களுக்கு முன்பே சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Singapore Book of Records புத்தகத்தில் அப்யான் இடம்பிடித்துள்ளார்.
`Base camp’ பகுதியை எட்டு நாட்களுக்குள் அடைந்துள்ளனர்.
அப்பகுதியை அடைந்த முதல் இளைய சிங்கப்பூரர் என்ற பெருமையை சேர்த்துள்ளார்.
“abyan.irkiz” இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் அனுபவங்களை பதிவிட்டுள்ளனர்.
இந்த மகத்தான வெற்றி அவர்களின் 6 மாத கடும் பயிற்சிக்கு கிடைத்தது என்றும் பதிவிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எவரெஸ்ட் `Base camp’ இடத்தில் சிங்கப்பூர் தேசிய கொடியுடன் அவர் மிகவும் பெருமையுடன் நிற்பது போன்ற படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
Om Madan Garg என்ற 6 வயது சிறுவனின் சாதனையை அப்யான் முறியடித்துள்ளார்.
முன்னதாக Om Madan Garg கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி எவரெஸ்ட் `base camp’ ஐ அடைந்தார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg