சிங்கப்பூரைத் தளமாக கொண்ட தளவாட நிறுவனமான Ninja Van அதன் ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தை பணி நீக்கம் செய்கிறதாக நிறுவனத்தின் பேச்சாளர் CNA விடம் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு சமீபத்திய செலவு மதிப்பிட்டலுக்கு பின் எடுக்கப்பபட்டதாக கூறினார்.
எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை
இருப்பினும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு பணிபுரிந்த ஒவ்வொரு ஆண்டுக்குமான ஒரு மாத சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.அவர்கள் புதிய வேலைகளை கண்டறியவதற்கும் நிறுவனம் ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.