டிக்டாக்கில் வீடியோ பதிவில் கோஷங்களை எழுப்பிய 22 வயதுடைய பெண் மீது குற்றச்சாட்டு!!

22 வயதுடைய நூர் சியாபிகா அப்துல்லா எனும் பெண் தனது டிக்டாக் id இல் ஒரு ரகசிய சமூகத்துடன் இருப்பது போல் வீடியோக்களை வெளியிட்டதற்காக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

அவர் பதிவிடும் வீடியோக்களில் கோஷங்கள் எழுப்புவது, கை சைகை செய்வது போன்றும் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2023-ஆம் ஆண்டுகளில் இது போன்று பலமுறை நடந்து கொண்டதால், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர் அந்த ஆண்டு மே மாதம் செங்காங் குடியிருப்பில் இருந்தபோது, அவர் சமூக ஊடக தளத்தில் Live இல் இருக்கும்பொழுது கோஷங்களை எழுப்பினார் என்பதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

இத்தகைய செயல்களை செய்வோர்களை காவல்துறை எச்சரித்தது.

அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

மே 27-ஆம் தேதி அவரின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டபட்டுள்ளது.