தீவின் மிக முக்கியமான சுற்றுலா தளத்தில் காட்டுத்தீ!!
ஏப்ரல் 22 அன்று, மேற்கு கியூபாவில் உள்ள அழகிய நகரமான Vinales அருகே ஒரு காட்டுத்தீ ஏற்பட்டது.Vinales ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை கவலையடையச் செய்தது.
காட்டுத்தீயை பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வந்தவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் பலத்த காற்று வீசுவதால் முழுவதுமாக அணைக்க கடினமாக உள்ளதாக கூறியது.
பாதிக்கப்பட்ட பள்ளத்தாக்கு, அதன் அழகுக்காக புகழ்பெற்றது. குதிரை சவாரி, குகை ஆய்வு போன்ற இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களாகும்.
அதிர்ஷ்டவசமாக, தீ மக்கள் வசிக்கும் பகுதிகளை அடையவில்லை, இருப்பினும் இது குறிப்பிடத்தக்க பகுதியை எரித்தது.
வறண்ட வானிலை மற்றும் எல் நினோ போன்ற காரணிகளை வல்லுநர்கள் குறிப்பிட்டு கூறினர்.அத்தோடு தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் மேலும் ஆராய்ந்து வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg