76 பூனைகளை கொடூரமாக கொன்ற 20 வயது இளைஞர்!! திட்டம் தீட்டி கொலை செய்து வந்தது அம்பலம்!!

76 பூனைகளை கொடூரமாக கொன்ற 20 வயது இளைஞர்!! திட்டம் தீட்டி கொலை செய்து வந்தது அம்பலம்!!

தென் கொரியாவில் 76 பூனைகளை கொடூரமாக கொன்ற வழக்கில் 20 வயதுடைய இளைஞருக்கு நபருக்கு 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர செயலை டிசம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை செய்துள்ளார்.

அவர் பூனைகளை காயப்படுத்தி கொலை செய்துள்ளார். பூனை ஒன்று தனது காரை கீறியதற்காக மிகவும் கோபமடைந்து, கொல்ல திட்டமிட்டுள்ளார்.

அவர் சில பூனைகளை கழுத்தை நெரித்தும்,ஒரு சில பூனைகளை கத்தரிக்கோலால் குத்தியும்,இன்னும் ஒரு சில பூனைகளை காரை ஏற்றியும் கொன்றுள்ளார்.

அவரது நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானதாக கருத்தப்படுகிறது.திட்டமிட்டு அவைகளை கொன்றுள்ளதாக நீதிமன்றம் கூறியது.

அவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை. அவர் செய்த இந்த குற்றச்செயலுக்காக வருந்துவதாக அவர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் அவரது கொடூரமான செயல்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.

அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

விலங்குகள் நலனில் தென் கொரியாவின் வளர்ந்து வரும் அக்கறை மற்றும் இத்தகைய மிருகத்தனமான வன்முறைச் செயல்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.