சிங்கப்பூர் நிறுவனங்கள் பாரம் தூக்கிகளுக்கான பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் செலவுகளை ஈடு கட்டுவதற்காக அரசாங்கம் அந்நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
மார்ச் மாதம் முதல் 4 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்படும். பாரம் தூக்கியால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் நான்காண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. கடந்த 2022- ஆம் ஆண்டு மும்மடங்கு அதிகரித்துள்ளது. வேலை இடங்களில் மாண்டோர்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பாரம் தூக்கி நிறுவனங்களுக்கு மிக முக்கியமான ஒன்று. பாதுகாப்பிற்காக பாரம் தூக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு வேலை செய்யும் இடத்தில் மாண்டோர்கள் எண்ணிக்கை 46, அதில் 6 பேர் மரணத்திற்கான காரணம் பாரம் தூக்கியாகும்.
பாரம் தூக்கியால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் நிறுவனங்கள் புதிய சாதனத்தை உபயோகப்படுத்த மனிதவள அமைச்சகம் நிதி வழங்கும் என்று குறிப்பிட்டது. இதற்காக நான்கு மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது.
இதற்கு சம்பந்தப்பட்ட எல்லா வர்த்தகங்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. புதிய சாதனம் அமைக்கப்படும் செலவில் 70 விழுக்காடு மானியம் வழங்கப்படும். மார்ச் மாதம் முதல் மானியம் நடைமுறைக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.