Singapore Job Vacancy News

சிங்கப்பூர் ஊழியர்கள் திறன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!

சிங்கப்பூரில் நடைபெற்ற கண்ணோட்ட கருத்தரங்கில் Lawrence Wong ஊழியர்களைப் பற்றிப் பேசி உள்ளார். சிங்கப்பூர் ஊழியர்கள் நல்ல வேலை எது என்பதைத் தீர ஆராய்ந்து நன்கு யோசித்து தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கல்வி தகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், திறன் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து அதன் அடிப்படையில் ஊழியர்கள் வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழியர்கள் திறன்களையும், தனிப்பட்ட திறன்களையும் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்.

தொழில்துறைகள் திறன் பாடு எனும் அம்சத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஊழியர்களை ஈர்த்து அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு பொருத்தமான வெகுமதி அளிப்பதற்கான வழிமுறையைக் கண்டறிய வேண்டும்.

வேலையில் சேரும்பொழுது இருந்த தகுதியை வைத்து அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தக் கூடாது என்றார். ஊழியர் சந்தையில் மாற்றம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் வேலைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.