சிங்கப்பூரில் மறுசுழற்சி விகிதம் குறைவு!!ஏன்? எதனால்?

சிங்கப்பூரில் மறுசுழற்சி விகிதம் குறைவு!!ஏன்? எதனால்?

சிங்கப்பூரில் கடைகள்,வீடுகள்,பள்ளிகள் போன்றவற்றில் மறுசுழற்சி செய்யும் பயன்பாட்டின் விகிதம் குறைந்து வருகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அதன் விகிதம் 112 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மறுசுழற்சி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நடத்தபட்டாலும் அதன் விகிதம் இவ்வாறு தான் பதிவானது.

அந்த நிலையை மேம்படுத்தப்படுத்தினால் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தினந்தோறும் மறுசுழற்சிக்கு அட்டைப் பெட்டிகள்,உலோக கொள்கலன்கள்,பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் அனுப்பப்படுகின்றன.

இவைகளை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.அதன்பிறகு மறுசுழற்சி பெட்டிகளில் போட வேண்டும்.

மறுசுழற்சி பெட்டிகளில் ஒரு அசுத்தமான பொருளை போடுவதால் அது மற்ற பொருட்களை மாசுபடுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அது மற்ற பொருட்களை அசுத்தபடுத்தும்.அதனால் மற்ற பொருட்கள் குப்பையை எரிக்கும் இடத்தில் அல்லது குப்பையை போடுமிடங்களுக்கு அனுப்படுகின்றன.

பொதுமக்கள் அவைகளைப் பிரித்து போட்டால் மிகவும் நல்லது.

இவ்வாறு செய்தால் ஊழியர்களுக்கு வேலை எளிதாகும்.

அது மட்டுமில்லாமல் மறுசுழற்சி செய்யலாம் என்று நிபுணர்கள் கூறினர்.

அதனால் நாட்டின் மறுசுழற்சியின் விகிதம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டனர்.