சிங்கப்பூரில் சிறை கைதியாக சிறையில் இருக்கும் ஆடம்(Adam) என்ற நபர் GCE சாதாரண நிலைத் தேர்வு எழுதினார். அதில் அவர் தேர்ச்சியும் பெற்றார். தான் இருப்பது சிறை என்றாலும் அதனைப் பொருட்படுத்தாமல் சாதாரண நிலைத் தேர்வுக்கு தயாராகியுள்ளார். தமது 21 ஆண்டு சிறை வாழ்க்கையில் இருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்க நினைத்துள்ளார். அவர் போதைப் பொருள் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர். அவர் சிறை தண்டனையை அனுபவிக்கத் தொடங்கி பத்து ஆண்டுகள் ஆகின்றன.
ஈராண்டுகளுக்கு முன் GCE N நிலைத்தேர்வு எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதில் அவர் 14 புள்ளிகளும் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர் எதிர்பார்ப்பையும் தாண்டி தேர்வு முடிவு வந்ததால், அதன் அடிப்படையில் GCE O நிலைத்தேர்வு எழுத முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு GCE சாதாரண நிலை தேர்வு(O Level) எழுதியுள்ளார். அதில் அவர் 2 “A´´, 2 “B´´ ஆகிய மதிப்பெண்களைப் பெற்றார். தேர்வு முடிவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன் மிகுந்த பதற்றமோடு இருந்ததாக அவர் கூறினார். இவ்வாறு Berita Mediacorp யிடம் ஆடம்(Adam) கூறினார்.
தேர்வுக்காக அவரைத் தயாராக படுத்த ஆரம்பித்துள்ளார். ஆனால், அது அவ்வளவு சுலபமாக இல்லை என்று கூறினார். சில நேரங்களில் படிப்பை நிறுத்தி விடலாம் என்றும் நினைத்ததாக கூறினார். படிப்பை நிறுத்தி பல மாதங்கள் ஆனதால் தன்னால் முடியுமா என்று நினைத்துள்ளார். அதற்காக தாம் தொடர்ந்து போராடியதாக அவர் கூறினார். இந்த ஆண்டு நடக்கவிருக்கும்GCE A நிலைத் தேர்வு எழுத ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். வணிகத்துறையில் இளங்கலை பட்டம் பெறுவதே குறிக்கோள். சிறை கைதிகள்
கடந்த 2022-ஆம் ஆண்டு 73 பேர் சிறைக்கைதிகள் GCE சாதாரண நிலைத் தேர்வை எழுதியுள்ளார்கள். அவர்களில் குறைந்தது 3 பாடங்களில் 57.9 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கும் முந்தைய ஆண்டிலும் சாதாரண நிலைத்தேர்வை எழுதியுள்ளனர். அதில்,62.1 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு சிறைச்சாலைத் துறை அறிவித்தது.