வெளிநாட்டு ஊழியர்கள் EMI இல் பொருட்கள் வாங்க முடியுமா?

வெளிநாட்டு ஊழியர்கள் EMI இல் பொருட்கள் வாங்க முடியுமா?

நீங்கள் work permit மூலம் வந்தவராக இருந்தால் கண்டிப்பாக EMI இல் மொபைல் போன் வாங்கலாம். நீங்கள் சோ ரூம்களுக்கு சென்று நான் வொர்க் பர்மிட் மூலம் வந்தவர் என்று கூறினால் அடுத்து என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட தகவல்களை உங்களிடம் கூறுவார்கள்.

ஆனால் நீங்கள் EMI இல் மொபைல் வாங்க மிகவும் அதிகமாக செலவாகும்.அதற்கு ஆகும் செலவில் நீங்கள் இரண்டு மொபைல் போன்களை வாங்கிரலாம்.

இதன் வைப்புத் தொகை $ 800, அடுத்தது மொபைல் போனின் விலை, இதை 12 மாதங்கள் கட்டவேண்டும். எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் அதற்கான தொகை அதிகமாக இருக்கும்.

அதற்கு வேறுவழி ஏதும் இருக்கிறதா? Atome என்ற அப்ளிக்கேசன் மூலம் நீங்கள் எடுக்கலாம்.
அந்த app இல் நீங்கள் உங்களுடைய sing pass வைத்து மட்டும் தான் வாங்க முடியும். உங்களுடைய sing pass மற்றும் bank அக்கவுண்ட் லிங்க் செய்து வைத்திருந்தால் வாங்க இயலும். இந்த atome app எந்தெந்த ஸ்டோரில் இணைந்து செயல்படுகிறதோ, அந்த ஸ்டோரில் நீங்கள் 3 மாத தவணையில் வாங்கிக்கொள்ளலாம்.

ஓர் உதாரணமாக நீங்கள் $2000 மதிப்புள்ள மொபைல் வாங்கினால் அதன் தொகையை மூன்றாக பிரித்து, அந்த தொகையின் ஒரு பகுதியை முதல் கட்டவேண்டும். மீதம் உள்ள தொகையை அடுத்தடுத்து இரண்டு மாதங்களில் கட்ட வேண்டும். அதனால் இந்த app ஐ பயன்படுத்தி மொபைல் போன் வாங்கி கொள்ளலாம்.