சிங்கப்பூர் வருபவர்கள் என்னென்ன பொருட்கள் கொண்டு வர வேண்டும். என்னெல்லாம் கொண்டு வரக்கூடாது.Luggage எவ்வளவு பொருட்கள் கொண்டு வர வேண்டும். Workers பெர்மிடில் வருபவர்கள் என்னெல்லாம் கொண்டு வரலாம்.Tourist விசா மூலம் வருபவர்கள் என்னென்ன பொருட்கள் கொண்டு வரலாம். இதைப் பற்றி விவரமாக காண்போம்.
சிங்கப்பூர் வருவதற்கு முன் டிக்கெட் புக் பண்ணும் பொழுது லக்கேஜ்க்கும் புக் பண்ண வேண்டும். நீங்கள் டூரிஸ்ட் விசாவில் மூலம் வரப் போகிறீர்களா? இல்லையென்றால் எந்த பர்மிட் மூலமாக வரப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.டூரிஸ்ட் விசாவில் வருபவர்களாக இருந்தால் எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை பேருக்கும் டிக்கெட் புக் பண்ண வேண்டும். வருபவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக லக்கேஜ் புக் பண்ணிக் கொள்ளலாம். லக்கேஜ் புக் பண்ணினால் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். டிக்கெட்டுக்கு கட்டணம் செலுத்தும் பொழுதே, லக்கேஜுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
லக்கேஜ் க்கு அனுமதித்த குறைந்தபட்ச எடை 20 கிலோ. ஹேண்ட் லக்கேஜுக்கு 7 கிலோ எடை ஆகும். லக்கேஜ் புக் பண்ணாவிட்டாலும், ஹேண்ட் லக்கேஜுக்கு 7 கிலோ எடை ஆகும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அது முற்றிலும் இலவசம். 20 கிலோ லக்கேஜ் புக் பண்ணால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் லக்கேஜ் மற்றும் ஹேண்ட் லக்கேஜுக்கு புக் பண்ணுவார்கள். கூடுதல் பொருட்களாக இருந்தால் 30 கிலோ லக்கேஜ் க்கு புக் பண்ணலாம். டிராவல்ஸ் மூலமாக டிக்கெட் புக் பண்ணுபவர்களாக இருந்தால், லக்கேஜ்க்கு புக் பண்ணார்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புக் பண்ண வில்லை என்றால் அதற்கும் புக் பண்ண வேண்டும்.
லக்கேஜ் புக் பண்ணதற்கு பிறகு, பொருட்களை எதில் வைத்து கொண்டு வர வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். பொருட்களை சூட்கேசில் வைத்துக் கொண்டு வருவதாக இருந்தால், பெட்டி கட்டி எடுத்துக் கொண்டு வருவது நல்லது. சூட்கேசில் பொருட்களை வைத்துக் கொண்டு வருவதாக இருந்தால், சூட்கேசின் எடை அனுமதித்த குறைந்தபட்ச எடையில் சூட்கேசின் எடையும் சேர்ந்துக் கொள்ளும். இதனால்,எடையின் அளவு குறைந்து விடும்.Documents மற்றும் passport இவ்விரண்டையும் ஹேண்ட் லக்கேஜில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்விரண்டும் மிக முக்கியமானது.
Workers பெர்மிடில் வருபவர்கள் ஒன்று அல்லது இரண்டு போர்வைகள் கொண்டுவர வேண்டும். வேலைக்காக தங்கும் இடத்தில் வெளிநாட்டவர்களும் இருப்பர். வெளிநாட்டவர்கள் குளிர்சாதன பெட்டியை(AC) அதிகமாக வைப்பதற்கும் வாய்ப்புண்டு. கூடுதலாக ஒரு போர்வைக் கொண்டு வருவது நல்லது. அடுத்தது, தேவையான மருந்து, மாத்திரைகள்( தலைவலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை,etc.,) அல்லது ஏதேனும் உடல்நிலை பிரச்சனை இருந்தால் அதற்கான மருந்துகளைக் கொண்டு வரலாம். ஆனால்,குறைவான அளவில் மட்டுமே மருந்துகளை கொண்டு வர வேண்டும். ஏனென்றால், சிங்கப்பூரில் அவ்வளவு எளிதாக மருந்துகளை வாங்க முடியாது.அதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றது. சிங்கப்பூரில் இந்தியாவில் கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் கிடைக்கும். ஆனால் சிங்கப்பூரில் விலை அதிகமாக இருக்கும்.தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து லக்கேஜ்களில் கொண்டு வருவது நல்லது.
சிங்கப்பூருக்கு வேலைக்காக வருபவர்கள் ஒரு வருடத்திற்கான தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வருவது நல்லது. சோப்பு, ஷாம்பு, பேஸ்ட், பிரஸ் ஆகியவற்றைப் பிளாஸ்டிக் பேக்கில் வைத்துக் கொண்டு வருவது நல்லது. Charger மற்றும் அதற்கான adapter களையும் கொண்டு வரலாம். சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்ய வரும் கம்பெனியில் சமைத்து சாப்பிடுவது மாதிரியா? அல்லது அவர்களே கொடுப்பார்களா?என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். நீங்களே சமைத்து சாப்பிடுவது மாதிரியாக இருந்தால் அதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரலாம். Tourist விசா மூலமாக வருபவர்களாக இருந்தால் இரண்டு மாதங்களுக்கு தேவையான பொருட்களைக் கொண்டு வரலாம்.
அடுத்ததாக மொபைல்,லேப்டாப், கேமரா ஆகியவற்றைக் கொண்டு வரலாம். இவ்வனைத்து பொருட்களும் சிங்கப்பூரில் கிடைக்கும். ஆனால், இந்தியாவின் விலை மதிப்பை விட சிங்கப்பூரில் விலைமதிப்பு அதிகமாக இருக்கும். இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பொழுது அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்தால் சிங்கப்பூரில் செலவுகளைச் சமாளிக்கலாம்.
எந்தெந்த பொருட்களை கொண்டு வரலாம் என்பதை தெரிந்து கொண்டோம். இப்போது எந்தெந்த பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். முதலாவதாக, ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது. மருந்து, மாத்திரைகளை அதிகமாக கொண்டு வரக்கூடாது.
சிங்கப்பூரில் Bubble Gum தடைச் செய்ய பட்ட பொருள். தடையை மீறி Bubble Gum பயன்படுத்தினால் Fine போடுவார்கள். முக்கியமாக போதைப்பொருட்களைக் கொண்டு வரக்கூடாது. சிகரெட் பாக்கெட்டுகள் அதிகமாக கொண்டு வரக்கூடாது. அதிகபட்சமாக இரண்டு பாக்கெட்டுகள் கொண்டு வரலாம். ஆனால், அதனை சீல் செய்துக் கொண்டு வரக்கூடாது.
வெளியில் வாங்கிய drinks களைக் கொண்டு வரக்கூடாது. ஒருவர் இரண்டு பாட்டில்கள் அல்லது எத்தனை கொண்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளின் படி கொண்டு வர வேண்டும்.ரொம்ப வாடையான பொருட்களைக் கொண்டு வரக்கூடாது.
ஹேண்ட் லக்கேஜிலும் ஆயுதங்கள் அல்லது இரும்பு சம்பந்தமான பொருட்களைக் கொண்டு வரக்கூடாது. Liquid items (ஊறுகாய், ஷாம்பு), மாத்திரைகள், paste ஆகியவற்றை ஹேண்ட் லக்கேஜில் வைத்துக் கொண்டு வரக்கூடாது. இதனை லக்கேஜ்களில் வைத்துக் கொண்டு வரலாம்.charger, Power bank, dresses ஆகியவற்றை ஹேண்ட் லக்கேஜில் வைத்துக் கொண்டு வரலாம்.
இவ்வாறு, இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பொழுது தேவையான பொருட்களை கொண்டு வருவதால் சிங்கப்பூரின் சூழ்நிலைகளை சமாளித்தும் செலவுகளை மிச்சப்படுத்தியும் வாழலாம்.