சிங்கப்பூரில் யாராலும் மறக்க முடியாத நாள் இன்று!!
சிங்கப்பூரில் மிகப்பெரிய மோசமான கட்டுமான வேலையிட விபத்து நடந்த தினம் இன்று.
20,ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு அந்த கோர சம்பவம் நடந்தது.
அன்றைய தினம் நிக்கல் நெடுஞ்சாலை பணி நடந்து கொண்டிருந்த போது விபத்து நேர்ந்தது.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது.
இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த மோசமான விபத்து நடந்த பிறகு கட்டுமான துறையில் பல பாதுகாப்பு விதிமுறைகள், நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவை நடைமுறையிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக அரசாங்கம் சார்பில் விசாரணை நடைபெற்றது.கட்டமைப்பின் வடிவமைப்பில் கண்டறியப்பட்ட தவறுகள், கட்டுமான தளத்தில் பயன்படுத்தப்பட்ட மணல் தரம், அதன் இயக்க மதிப்பீடு செய்வது முறையாக நடைபெறவில்லை உள்ளிட்ட தவறுகள் தெரியவந்தது.
இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான மேற்பார்வை, தனிப்பட்ட சோதனை செய்வது போன்ற நடைமுறைகள் இப்போதும் செயல்முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு விதிமுறைகள் கடந்த 20 ஆண்டுகளாக கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg