சிங்கப்பூரில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! 10 பேர் கைது!!

சிங்கப்பூரில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனை!! 10 பேர் கைது!!

17 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட டஜன் கணக்கானவர்கள் தங்கள் சிங்பாஸ் விவரங்களை மோசடி செய்பவர்களிடம் கொடுத்ததாகக் கூறி விசாரிக்கப்படுகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் சிலர் தங்களின் தகவல்களை தலா $10,000 க்கு விற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் 78 சந்தேக நபர்களில் 10 பேரை கைது செய்தனர்.

எளிதில் பணம் பெறும் திட்டங்களைத் தவிர்க்குமாறும், தங்கள் சிங்பாஸ் விவரங்களை முகம் தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களை கேட்டு கொண்டனர்.

தங்கள் சிங்பாஸ் விவரங்களைப் பகிர்வது சட்டத்திற்கு எதிரானது என்றும், பிடிபட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

மேலும், இந்தக் குற்றச் செயல்கள் குறித்து ஏதேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டு கொண்டனர்.