சிங்கப்பூரை விட மிகச் சிறந்த விமான நிலையம் இருக்கிறதா? முதல் இடத்தைப் பிடித்த விமான நிலையம் எது?

சிங்கப்பூரை விட மிகச் சிறந்த விமான நிலையம் இருக்கிறதா? முதல் இடத்தைப் பிடித்த விமான நிலையம் எது?

ஜெர்மனியின் Frankfurt இல் விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரிட்டனைச் சேர்ந்த Skytrax எனும் விமானத்துறை ஆலோசனை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சாங்கி விமான நிலையம் உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து பெருமையைச் சேர்த்துள்ளது.

முதல் இடத்தை ஹமாட் விமான நிலையம் தட்டி சென்றது.

சாங்கி விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு ஆசியாவின் தலைச் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.