சிங்கப்பூர் பிரதமர் பொறுப்பிலிருந்து விலக உள்ள நிலையில்……சிங்கப்பூர் காவல்துறையின் மிக உயரிய விருது!!

சிங்கப்பூர் பிரதமர் பொறுப்பிலிருந்து விலக உள்ள நிலையில்......சிங்கப்பூர் காவல்துறையின் மிக உயரிய விருது!!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வரும் மாதம் 15-ஆம் தேதி பதவி விலகுவார் என்று ஏப்ரல் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு விருந்துக்கு சிங்கப்பூர் காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.அவர் அளித்த சேவைக்கும் ,ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

 

இந்த சிறப்பு விருந்து நேற்று(ஏப்ரல் 17) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் லீ கலந்து கொண்டார். இந்த சிறப்பு விருந்தில் உள்துறை ,சட்ட அமைச்சர் கா.சண்முகமும் கலந்து கொண்டார்.

இந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் அவர்களுக்கு “துமாசிக் வாள்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதானது சிங்கப்பூர் காவல்துறையின் மிக உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்துறை,சட்ட அமைச்சர் கா.சண்முகம் லீயுடன் இணைந்து வேலைப் பார்த்த தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவருடன் பணி புரிந்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று பகிர்ந்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வில் சிங்கப்பூர் காவல்துறைக்கு லீ அளித்த ஆதரவு ,காவல்துறையின் மீது வைத்த நம்பிக்கை என பல்வேறு நற்குணங்களுக்காக பாராட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.