சிங்கப்பூரின் MOM ஓர் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது!!

சிங்கப்பூரின் MOM ஓர் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது!!

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஓர் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

நீக்குபோக்காக வேலைச் செய்வதற்கு அனைத்து ஊழியர்களும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அதெற்கென நிறுவனங்கள் கட்டாயமாக தெளிவான வழிகாட்டுதலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.

இந்த புதிய நடவடிக்கை முத்தரப்பு பணிக்குழுவின் சமீபத்திய நடவடிக்கை என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

அரசாங்கம்,தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்ட அமைப்பே முத்தரப்பு பணிக்குழு.

கட்டாய வழிகாட்டுதல் மூலம் பல்வேறு வகையான வேலைகளுக்கான நடைமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒழுங்குப்படுத்தும் என்று நம்புவதாக முத்தரப்பு பணிக்குழு கூறியது.

இருப்பினும், நீக்குபோக்காக வேலை விண்ணப்பிப்பதற்கு முறையான கோரிக்கைகள் இருந்தால் மட்டுமே அளிக்கப்படும்.

புதிதாக சேருபவர்கள் இயல்பான வேலை நேரத்தை பின்பற்ற வேண்டும்.

நீக்குபோக்கான வேலை ஏற்பாட்டிற்கு வேலை உறுதி செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் ஊழியர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கும் முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. கட்டாய வழிகாட்டுதல் என்றாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதலின்படி எழுத்துப்பூர்வமாக விண்ணப்பங்களை ஊழியர்கள் சமர்ப்பிக்கும் போது நிறுவனங்கள் தெளிவாக அதன் நடைமுறைகளை குறிப்பிட வேண்டும்.


விண்ணப்பத்தை சமர்ப்பித்து இரண்டு மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தகுந்த காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

எந்தெந்த காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்பதற்கான தெளிவான தகவல்களை முத்தரப்பு பணிக்குழு வெளியிடும் என்று அமைச்சகம் தெரிவித்தது.

ஊழியர் தனது விண்ணப்பம் சரியாக சரிபார்க்கவில்லை என்று கருதினால் தாராளமாக முத்தரப்பு பணிக்குழுவை அணுகலாம்.