சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுவதற்கான புதிய பாதைகள் அமைக்கப் பட போவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. ஏழு வட்டாரங்களில் அமைக்கப்பட போவதாக தெரிவித்தனர்.நில போக்குவரத்து ஆணையித்தின் சைக்கிள் தடம் கட்டமைப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்போவதாக தெரிவித்தனர்.
Geylang, Hougang, Kaki Bukit, Marine Parade, Potong Pasir, Senkang மற்றும் Serangoon ஆகிய ஏழு பகுதிகளில் புதிய சைக்கிள் ஓட்டுதல் பாதைகள் அமைக்கப்பட உள்ளது.அடுத்த ஆண்டு (2024) முதல் படி படியாக நிறைவேற்றப்படும்.
புதிய சைக்கிள் ஓட்டுதல் பாதை கட்டுவதற்கான ஏல குத்தகைக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தனர்.இத்திட்டம் 2020-ஆம் ஆண்டில் அறிமுகப்பட்டது.2030-ஆம் ஆண்டிற்குள் கிட்டதட்ட 1300km விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள். இதுவே ஆணையத்தின் இலக்கு என்றும் கூறினார்கள்.