சிங்கப்பூரின் மிகப்பெரிய பழமை வாய்ந்த வணிக மையம் தற்காலிகமாக மூடல்!!

சிங்கப்பூரின் மிகப்பெரிய பழமை வாய்ந்த வணிக மையம் தற்காலிகமாக மூடல்!!

சிங்கப்பூரில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை மிகவும் பிரபலமான பழைய விமான நிலைய சாலை உணவு மையம் மறுசீரமைப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்காக நான்கு மாதங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

மரைன் பரேட் டவுன் கவுன்சிலால் பழுதுபார்க்கும் பணி, மறு சீரமைப்பு பணிகளுக்காக உணவு மையத்தை மீண்டும் கலர் அடிப்பதற்காகவும், உணவு மையத்தில் உள்ள பழைய நாற்காலிகளை மாற்றுதல், மின்விசிறிகள் மாற்றுதல், கழிவறைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கு செயல்பட்டு கொண்டிருந்த ஸ்டால்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால், அவர்களுக்காக ஓர் அறிவிப்பையும் NEA தெரிவித்துள்ளது. அவர்களின் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த விரும்புபவர்களுக்கு NEA தற்காலிகமாக வேறொரு கடைகளை வழங்கும் என்று தெரிவித்தது.

இந்த பழுதுபார்க்கும் மற்றும் மறுசீரமைப்பு நடைபெற உள்ளதை காரணமாக காட்டி கடைகளின் வாடகையில் உயர்வு இருக்காது என்றும் கூறியது. சேவை மற்றும் பாதுகாப்பு கட்டணங்கள் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு தள்ளுபடி ஆகும். இதனை நகர சபைச் செய்தி தொடர்பாளர் கூறினார்.