Latest Sports News Online

சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப் பட்ட முதல் அரசாங்க ஊழியர்!

சிங்கப்பூரில் தீவிரவாத போக்கிற்கு மாறிய ஆசிரியர் ஒருவர் சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப் பட்டுள்ளார்.கடந்த அக்டோபர் மாதம், 38 வயதுடைய முகமது கைருல் ரிதுவான் முகமது சரிப் என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

இவர் கல்வி அமைச்சில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்ட முதல் அரசாங்க ஊழியர். இவர் Facebook (முகநூல்) லில் இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான நடவடிக்கைக்களை பார்த்து

ஈர்க்கப்பட்டு பின்,சுயமாக தீவிரவாத பாதைக்கு அவரை மாற்றிக் கொண்டுள்ளார்.ஹமாஸ் உடன் இணைந்து இஸ்ரேலியத் தற்காப்புப் படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட காஸா செல்லவும் திட்டமிட்டுள்ளார்.கடந்த ஆண்டு 2007 லில் நடந்த இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சனை ஏற்பட்டது. அதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதாகக் கூறினார்.

காஸாவில் இருக்கும் முஸ்லீம்களை ஆதரித்து,அவர்களைத் தற்காக்கவும் விருப்பம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, காஸாவிற்கு செல்ல கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்தே தயாராக இருந்து இருக்கிறார்.அங்கு சென்றதும் ஹமாஸ் உடன் இணைந்து செயல் படவும் விரும்பியுள்ளார்.

ஆள்கடத்தல் ஈடுபடுவது,ஆயுதம் ஏந்தி போரிட,போர்க்கைதிகளைக் கொல்ல போன்ற ஹமாஸ் அமைப்பின் உத்தரவுக்கு செயல்பட தயாராக இருந்துள்ளார்.உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு அவரிடம் விசாரணை நடத்தியதில் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி எதும் இல்லை என்று கூறினார்கள். அவர் தனித்து செயல் பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முதல் அரசாங்க ஊழியர் என்பது குறிப்பிடதக்கது.