சிங்கப்பூரில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு!!

சிங்கப்பூரில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு!!

சிங்கப்பூரில் இன்று தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி,ஒரு கிராம் தங்கத்தின் விலை $100 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விலைவாசி உயர்வுக்கு உலகப் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் ஆகியவையே காரணமாக கூறப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். அதனால் இந்த சூழ்நிலை நிலவி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

அதோடு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.