சிங்கப்பூரில் முறியடிக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான செயல்கள்!!

சிங்கப்பூரில் முறியடிக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான செயல்கள்!!

சிங்கப்பூரில் கடந்த மாத இறுதியில் கெயிலாங்கில் சட்டவிரோதமான செயல்கள் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சூதாட்டம், சட்டவிரோதமான பொருட்களை விற்பனை செய்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 35 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனை நடவடிக்கைகளில் காவல்துறையினர், சுங்கம், தரைவழி போக்குவரத்துத்துறை,குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையத்தின் அதிகாரிகள் இந்த அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத சூதாட்டம் மற்றும் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பது போன்றவற்றை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ச் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது அவர்கள் சுமார் $146,560க்கும் அதிகமான பணத்தையும், சூதாட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு நடவடிக்கையில் சட்டவிரோதமான சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக 72 வயதான நபர் ஒருவரை கைது செய்தனர்.

மேலும் 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சுமார் $6,391 மதிப்புள்ள
பதிவு செய்யப்படாத சுகாதார பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.