எக்ஸ்பிரஸ்வேயில் லாரி, பைக் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த 24 வயது இளைஞர்!!

எக்ஸ்பிரஸ்வேயில் லாரி, பைக் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த 24 வயது இளைஞர்!!

சிங்கப்பூரின் AYE விரைவுச் சாலையில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 12ஆம் தேதியன்று காலை நடந்தது.

இந்த விபத்து குறித்து காலை 7.20 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

24 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து 46 வயதான லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.