சிங்கப்பூருக்கு செல்ல உங்கள் resume மற்றும் certificate தயார் செய்வது எப்படி??

சிங்கப்பூருக்கு செல்ல உங்கள் resume மற்றும் certificate தயார் செய்வது எப்படி??

சிங்கப்பூர் வேலைக்கு டாக்குமெண்ட்களை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இப்பதிவில் தெளிவாக பார்ப்போம்!!
பெரும்பாலும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும்போது டாக்குமெண்ட்களை மிக தெளிவாகவும் கவனமாகவும் தயார் செய்து அனுப்ப வேண்டும்.அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் நீங்கள் உங்களுடைய மொபைல் போனில் போட்டோ எடுத்து அனுப்புவது, ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யாமல் அனுப்புவது,ஸ்கேன் செய்யாமல் கேமரா மூலம் எடுப்பதால் உங்களுடைய டாக்குமெண்ட்கள் தெளிவாக இல்லாமல் இருக்கும். அதனால் அவர்கள் உங்களை தேர்ந்தெடுப்பதற்கு தயக்கம் காட்டுவர்கள்.

வேலைக்காக MOM இல் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய டாக்குமெண்ட்டில் ஏதேனும் ஒரு சிறிய தவறுகள் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாது.உதாரணமாக உங்களுடைய டாக்குமெண்ட் தெளிவாக இல்லாவிட்டாலும் உங்களுடைய டாக்குமெண்ட் நிராகரிக்கப்படும். நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் எந்த அளவுக்கு ஏஜென்ட்களுக்கும், பணம் செலுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறீர்களோ அதே அளவிற்கு உங்களுடைய டாக்குமெண்ட்களை தயார் செய்வதற்கும் அளிக்க வேண்டும்.இதை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால் உங்களால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாது.

 

டாக்குமெண்டை எப்படி தயார் செய்வது?

நீங்கள் அனுப்ப வேண்டிய அனைத்து டாக்குமெண்ட்களையும் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். டாக்குமெண்டில் முதலில் இருக்க வேண்டியது உங்களுடைய RESUME.அதை நீங்கள் சரியாக தயார் செய்ய வேண்டும். அதனை உங்கள் மொபைல் அல்லது நெட் சென்டர்களுக்கு சென்று தயார் செய்யலாம்.

 

உங்களுடைய RESUME இல் தேவையில்லாத காரணங்களை குறிப்பிட்டிருக்கக் கூடாது. உங்களுக்கு எந்த வேலை நன்றாக தெரியுமோ, நீங்கள் என்ன படித்து உள்ளீர்களோ அதை மட்டும் குறிப்பிட்டிருந்தால் போதுமானது. உங்களை தேர்வு செய்யும்போது உங்களின் resume இல் குறிப்பிட்டுள்ள தகவல்கள் இருக்கிறதோ அதை வைத்துதான் உங்களை மதிப்பிடுவார்கள்.

உதாரணமாக உங்களுக்கு தெரியாத வேலையை நீங்கள் உங்கள் RESUME இல் குறிப்பிட்டிருந்தால் அவர்கள் அதை வைத்து உங்களை தேர்வு செய்வார்கள்.நீங்கள் சிங்கப்பூர் சென்றவுடன் அந்த வேலை உங்களுக்கு தெரியவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தால் உங்களை திருப்பி தாய்நாட்டிற்கே அனுப்பிவிடுவார்கள். அதனால் உங்களுக்கு எந்த வேலை தெரியுமே அதை மட்டுமே குறிப்பிடுவது மிகவும் நல்லது.
உங்களுடைய RESUME இல் நீங்கள் தொடர்ந்து உபயோகிக்கின்ற ஃபோன் நம்பரை மட்டும் குறிப்பிடுங்கள்.மேலும் mail id, முகவரி போன்ற தகவல்களையும் சரியாக குறிப்பிட மறந்து விடாதீர்கள்.

PDF இல் இருக்க வேண்டிய டாக்குமெண்ட்கள் மற்றும் வரிசை முறை :

1. Resume

2. 10th marksheet

3. 12th marksheet

4. Diploma or Degree certificate

5. Passport copy

6. Fully vaccination international certificate

7. Passport size photo

8. Full size photo

9. Experience certificate or video

இவை அனைத்தும் மிகவும் தெளிவாகவும் ஒரே PDF க்குள் இருக்கமாறு அனுப்ப வேண்டும். டாக்குமெண்ட்களை டாக்குமெண்ட் முறையில் அனுப்பாமல் PDF முறையில் அனுப்ப வேண்டும்.

அடுத்ததாக,நீங்கள் இந்தியாவில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவராக இருந்தால் நீங்கள் வேலை செய்வது போன்று வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அனைத்தையும் சரியாக தயார் செய்து அனுப்பினால், அனைத்தும் சரியாக இருந்தால் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

“ அலட்சியமாக செயல்பட்டால் உங்களுக்கான வாய்ப்பு கைவிட்டு போவதற்கும் வாய்ப்புண்டு!! கவனமாக, தெளிவாக செயல்படுங்கள்!!”