Singapore Job News Online

பயணிகளை விட்டுச் சென்ற விமானம்!

இந்தியாவில் பெங்களூரில் கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் ஜனவரி,9-ஆம் தேதி திங்கட்கிழமை காலை அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது. விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் பல விமானங்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதும், பயணிகளைத் தரையிறக்கவதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது

அதில்,`கோ ஃபர்ஸ்ட்´என்ற நிறுவனத்தின் விமானம் டெல்லி செல்வதற்காகத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் காத்திருப்புக் கூடத்தில் காத்திருந்தனர். காத்திருந்த பயணிகளை விமானத்திற்கு அழைத்துச் செல்ல மொத்தம் நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில், மூன்று பேருந்துகளில் வந்த பயணிகளை மட்டும் ஏற்றிக் கொண்டும், மற்றொரு பயணிகள் பேருந்தை மறந்துவிட்டு விமானம் புறப்பட்டுச் சென்றது.காலை 6.40 மணியளவில் விமானம் புறப்பட்டுச் சென்ற நிகழ்வு நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.“நாங்கள் மூன்றாவது பேருந்தில் இருந்தோம். என் நண்பர் இன்னொரு பேருந்தில் இருந்தார்.மற்ற மூன்று பேருந்துகளில் இருந்த பயணிகள் விமானத்தில் ஏறிவிட்டனர். அதில் என் நண்பரும் ஒருவர். என் நண்பர் விமானம் கிளம்பத் தயாராக உள்ளதாக என்னிடம் கூறினார். இதையெடுத்து, மற்ற பயணிகளிடமும் கூறிச் சத்தமிட்டேன்´´,விமான பயணிகளில் ஒருவரான சுமித் குமார் கூறியதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா´ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வை அறிந்த பலரும் விமான நிறுவனத்தின் மீது கொந்தளித்தனர். இந்நிகழ்வு ஒரு பெருந்தவறு என்று ஒப்புக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள்,விமான பயணிகளைச் சமாதானப்படுத்தினார்கள். பின்னர், அவர்களை மற்றொரு விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையெடுத்து காலை 10 மணியளவில் காத்திருந்த 54 பயணிகளையும் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.அவர்களின் உடமைகள் அனைத்தும் முதல் விமானத்தில் சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா விமானப் போக்குவரத்து தலைமை இயக்கம் இச்சம்பவம் குறித்து கோ ஃபர்ஸ்ட் ஏர்வேஸ் நிறுவனம் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.