சிங்கப்பூரில் நேற்று ( ஜனவரி,10-ஆம் தேதி) நடந்த நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரின் சுகாதார துறையில் மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கொக் குவாங் (Louis ng kok kwang) நடந்த நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு செவிலியர்களை அனுமதியின் கீழ் பணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சகத்திடம் கேள்விக் கேட்டார்.
சுகாதார பராமரிப்பு துறையில் கூடுதல் செவிலியர்களைப் பணி அமர்த்த ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.வெளிநாடுகளிலிருந்து வரும் செவிலியர்கள் அவர்கள் வழக்கமாக பணிபுரியும் இடங்களைத் தவிர்த்து வேறு சில உதவி பராமரிப்புப் பணியாளர்களை அமர்த்துவதற்கும் சுகாதார துறை அனுமதி பெற்றுள்ளது.இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் கேட்ட கேள்விக்கு சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஸாம் (Rahayu Mazham) பதில் அளித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.சிங்கப்பூரில் வெளிநாட்டு செவிலியர்கள் சார்ந்திருப்போர் அட்டை வைத்து இருக்க வேண்டும்.சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு செவிலியர்கள் தங்களுடைய குடும்பத்தை தங்களுடன் சேர்ந்து வசிக்க விரும்பும் செவிலியர்கள் சார்ந்திருப்போர் அட்டை (dependant’s pass) விண்ணப்பங்கள் தொடர்பான பிரச்சனைகளையும் அரசாங்கம் கவனித்து வருவதாக கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 4000 ஆயிரம் புதிய செவிலியர்களைப் பணியமர்த்த சிங்கப்பூர் அரசாங்கம் விரும்புவதாக குறிப்பிட்டார். இவ்வாறு நாடாளுமன்றத்தில் சுகாதாரப் பராமரிப்புத் துறையிடம் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு சுகாதார மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் பதிலளித்தார்.