Latest Tamil News Online

SBH மீடியா தகவல் வெளியீட்டு குறித்த குறிப்பில் முரண்பாடுகள் காரணமாக, மீடியாக்கு கொடுக்கும் நிதி பாதிக்குமா!

SBH மீடியாவில் பத்திரிக்கைகள் அச்சிடப்பட்டு விநியோகத்திற்கான கணக்கிட பட்டதற்கு பின்னர் அவைகள் அழிக்கப்பட்டதாகவும், சந்தாதர்களின் எண்ணிக்கையும் ஒரு மடங்கு மிக படுத்தி காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு(2022) நடந்த ஆய்வின் போது வெளிவந்துள்ளது. அந்த ஆய்வின் சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு, தகவல் வெளியீடு குறித்த சில புள்ளி விவரங்களில் முரண்பாடுகள் கண்டுப்பிடிக்க பட்டதாக SBH பேச்சாளர் கூறியுள்ளார்.

SBH மீடியாவின் நிறுவனத்தின் அன்றாட விற்பனையின் எண்ணிக்கை எண்பத்தி ஐந்தாயிரம் முதல் தொண்ணூற்று ஐந்தாயிரம் வரை மிக படுத்திக் காட்டப்பட்டுள்ளதாக தி ஸ்கிரிப்டிஸ்ட் தெரிவித்துள்ளது.அன்றாட சராசரி விற்பனையில் 10 லிருந்து 15 விழுக்காடு வரை ஆகும்.

தகவல் வெளியீட்டு குறித்த குறிப்பில் சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டதும் உடனடியாக அதை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக பேச்சாளர் கூறினார். அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும்,அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

அதில் தொடர்புடையவர்கள் பெயரை மற்றும் அந்த நடைமுறை எத்தனை நாட்களாக நட பெற்றதையும் முழுமையாக SBH மீடியா வெளியிடவில்லை. கண்டுபிடிப்பின் விவரங்கள் அனைத்தையும் பகிரும் படி sbh மீடியாவை கேட்டுக் கொண்டுள்ளதாக தொடர்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. பத்திரிக்கை வெளியீடு குறித்த முரண்பாடு,Sbh மீடியாக்கு கொடுக்கும் நிதி பாதிக்குமா என்பதை தனது சொந்த ஆய்வு முடிவெடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.