சிங்கப்பூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்!!

சிங்கப்பூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்!!

சிங்கப்பூர் செல்பவர்கள் கவனத்திற்கு!!

2024-ஆம் ஆண்டில் பலர் மோசடிக்காரர்களிடம் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை இப்பதிவில் தெளிவாக தெரிந்துகொள்வோம்!!

மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி பலர் ஏமாறும் நிலை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமது சப்ஸ்கிரைபர்களில் ஒருவர் மோசடிக்காரரிடம் சிக்கி கொண்டதைப் பற்றியும் அவர் எதிர்கொண்டுள்ள பிரச்சனையை பற்றியும் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.வேலைக்கான இன்டெர்வியூவை மொபைல் போன் மூலம் எடுக்கப்பட்டது.அதன்பின் நீங்கள் 10 முதல் 15 நாட்களுக்குள் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறி விசா விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பணம் தேவைப்படும் என்று கூறியுள்ளார். அந்த பணத்தையும் அவரிடம் இருந்து அந்த ஏஜென்ட் பெற்றுள்ளார்.அதோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக நமது சப்ஸ்கிரைபரிடம் பணத்தை பெற்றுள்ளார். இதுவரை 6 லட்சம் தொகையை அவரிடமிருந்து அந்த ஏஜென்ட் பெற்றுள்ளார். இவ்வளவு தொகையை பெற்ற பின்னும் மீண்டும் அவருக்கு போன் செய்து இன்னும் தொகை வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த ஏஜென்ட் மீண்டும் பணம் கேட்பதால் தனக்கு வேலை வேண்டாம் என்று கூறியுள்ளார்.அவர் கட்டிய பணத்தையும் திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த ஏஜென்ட் நீங்கள் கட்டிய பணம் வேண்டும் என்றால் அதை ரத்து செய்வதற்கு மேலும் கூடுதலாக 70 ஆயிரம் பணம் கட்ட வேண்டும். இல்லையெனில் அதை ரத்து செய்ய முடியாது என்று அந்த ஏஜென்ட் அவரிடம் கூறியுள்ளார்.

மோசடிக்காரர்கள் மற்றுமொரு உத்தியைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள். அதைப் பற்றியும் விவரமாக தெரிந்து கொள்வோம்.

S-Pass, E-Pass வேலை வாங்கித் தருவதாக கூறி அதிகத் தொகையை முன்பணமாக பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் இழுத்தடிப்பது. கிட்டத்தட்ட 3 அல்லது 4 மாதங்களுக்கு மேலாக பதில் சொல்லிக் கொண்டே இருப்பது.மேலும் அவர்கள் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு வேறொரு வேலைக்கு அந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள்.

பலவிதமான முறைகளில் மோசடிக்காரர்கள் ஏமாற்றுகின்றனர். அவர்கள் வலையில் பலர் சிக்கி கொண்டும் தவித்து வருவதும் நிதர்சனமான உண்மையே.இது போன்று மோசடிக்காரர்கள் தங்களைப் பற்றி சுயநலமாக சிந்திக்க மட்டுமே செய்வார்கள்.மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.இவ்வாறு ஏமாறாமல் இருப்பதற்கு குறைந்த பணத்தை முன்பணமாக செலுத்துவது நல்லது.முன்பணம் செலுத்துவதற்குமுன் வேலைக்கான நடவடிக்கை எத்தனை நாட்களாகும்? எத்தனை நாட்களுக்குள் சிங்கப்பூர் செல்ல வேண்டியதாக இருக்கும்? என்பதை போன்ற முக்கியமான தகவல்களை விவரமாகவும், தெளிவாகவும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அதன் பிறகு முன்பணத்தை செலுத்துங்கள்.

முன்பின் தெரியாத நபர்களிடம் பணத்தை கட்டிவிட்டு ஏமாந்து விடாதீர்கள். கட்டிய பணத்தை எப்படி வாங்கலாம் என்பதை முன்கூட்டியே சற்று சிந்தித்து பணத்தை செலுத்துங்கள். ஒரு சில ஏஜென்ட்கள் ip வருவதற்குமுன் குறைந்த முன்பணத்தைப் பெற்று கொண்டு அவர்களால் ஆன உதவிகளை அளித்து சிங்கப்பூருக்கு நல்லபடியாக செல்ல வைக்கின்றனர்.

நீங்கள் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு மோசடிக்காரர்களின் வலையில் சிக்காமல் சிங்கப்பூருக்கு நல்லபடியாக சென்று உங்கள் கனவை அடையுங்கள்.