சிங்கப்பூரில் இந்த தவறை செய்தால் அபராதம் நிச்சயம்!! மார்ச் முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!!
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நடத்தப்பட்ட சோதனையில் $7 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மின் சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த சோதனையின் போது மின்சிகரெட்டுகளை வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்திய குற்றத்திற்காக 2,200க்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தகவல் சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மின் சிகரெட்டுகளை பயன்படுத்தும் போது அல்லது வைத்திருக்கும் போது பிடிபட்டால் குற்றவாளிக்கு $2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நடைமுறை மார்ச் முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் 16 சமூக ஊடகங்கள் மற்றும் e-commerce தளங்கள் மின்சிகரெட்டுகள் தொடர்பான தகவல்களை தொகுத்து வழங்கிய காரணத்திற்காக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும்.
இது போன்ற குற்றங்களை முதல் முறை புரிப்பவர்களுக்கு $10,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg