சிங்கப்பூரில் 20 வயது மற்றும் 29 வயதுக்கும் உட்பட்ட நான்கு பேர் மீது மோசடி குற்றச்சாட்டு!!

சிங்கப்பூரில் 20 வயது மற்றும் 29 வயதுக்கும் உட்பட்ட நான்கு பேர் மீது மோசடி குற்றச்சாட்டு!!

சிங்கப்பரில் 4 பேர் மீது மோசடி தொடர்பான குற்றங்களுக்காக ஏப்ரல் 4 தேதி யன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

4 பேர்களில் ஒருவர் வாடகைக்கு அறை இருப்பதாக நம்பி ஒருவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.அந்த அறையை பாதுகாக்க அவரிடம் ஒரு தொகை கொடுத்த பிறகு, அந்த நபரை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மீதம் உள்ள மூன்று நபர்கள் கிரிப்டோ கணக்கை தொடங்குவதற்கு டெலகிரமில் $ 500 முதல் $600 வரை சலுகைககளுக்கு தங்களின் இணைய வங்கிச் சான்றுகள்,சிங்பாஸ் போன்ற விவரங்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று நபர்களின் வங்கிக் கணக்குகள், வேலை மோசடிகளுக்கு மற்றும் முதலீடு மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றத்தை முதல்முறை குற்றம் புரிபவர்களுக்கு $ 5000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படும்.

மோசடி நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படும்.

இது போன்ற மோசடிகளிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு பொதுமக்கள் சிங்பாஸ், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.