முன்னாள் சிங்கப்பூர் ஒலிம்பிக் ஃபென்சர் ஜேம்ஸ் வோங் காலமானார்!!

முன்னாள் சிங்கப்பூர் ஒலிம்பிக் ஃபென்சர் ஜேம்ஸ் வோங் காலமானார்!!

சிங்கப்பூரில் ஒலிம்பிக் வீரர் ஃபென்சர் ஜேம்ஸ் வோங் தனது 70 வயதில் காலமானார்.
இவரிடம் பயிற்சி பெற்ற ஃபென்சர் அமிதா பெர்த்தியர் ஒலிம்பிக் டிக்கெட்டைப் பெற்று அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு சாங்கி விமான நிலையத்திலிருந்து நேரடியாக நல்வாழ்வு மையத்திற்கு விரைந்து சென்றார்.

வோங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையை பார்த்தார். அவர் பெர்தியரை அடையாளம் கண்டார். அவளை மைட்டி மவுஸ் என்று செல்லப் பெயரால் அழைத்தார். இன்னும் வோங் அவருக்கு நிறைய தைரியமான வார்த்தைகளை கூறியுள்ளார்.

வோங் 70 வயதில் காலமானதால், அவருக்கென்று ஒரு நினைவகம் வைத்துள்ளார். பெர்த்தியர், வோங் இருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் ஒரு சில வார்த்தைகளை கூறினார். சாதிப்பதற்கு வயது தடையில்லை என்பதை நம்ப வைத்தவர்.

1992 ஆம் ஆண்டு பார்சிலோனா விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரை கௌரவப்படுத்திய முதல் இரண்டு பென்சர்களில் ஒருவர் ஆவார்.

வோங் SEA விளையாட்டு போட்டிகளில் பல வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.மேலும் அவர் ஓய்வு பெற்ற பிறகும் அவர் விளையாட்டில் ஈடுபட்டார்.இவர் சிங்கப்பூரின் முதல் பென்சிங் கிளப்பான z fencing இணை நிறுவனங்களில் ஒருவராக இருந்தவர். இது 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தேசிய பயிற்சியாளராகவும், துணைத்தலைவராகவும் வோங் பணி புரிந்தார்.

டோன் சிங் வோங் கை தனது பயிற்சியால் நிறைய முழங்கால் மற்றும் முதுகு நோய்களுடன் போட்டிகளுக்கு சென்றாலும் வலியை பொருட்படுத்தாமல் விடாமுயற்சியுடன் வைக்கிங் என்ற பெயரை பெற்றார்.

அவர் அடிக்கடி மூன்று இடங்களை தவிர வேறு எங்கேயும் செல்ல மாட்டார், வீடு, உடற்பயிற்சி கூடம், z fencing . இவர் மக்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

சிங்கப்பூர் வாள்வீச்சில் அவரது பங்களிப்பை அளவிட முடியாது என்று தேசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் கிரேஸ் ஃபூ கூறினார்.