தீவிர காலரா நோய் பரவலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தப்பி சென்ற மக்களுக்கு நேர்ந்த கதி!! அதிக சுமையால் படகு…..

தீவிர காலரா நோய் பரவலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தப்பி சென்ற மக்களுக்கு நேர்ந்த கதி!! அதிக சுமையால் படகு......

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் மீன்பிடி படகு ஒன்று அதிக சுமை காரணமாக விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 7ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த படகில் 130 பயணிகள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 20 பயணிகளை காணவில்லை என்றும், 10 பேர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிர காலரா நோய் பரவல் காரணமாக பயணிகள் லுங்காவில் இருந்து மொசாம்பிக் தீவுக்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.