சிங்கப்பூருக்குள் 5-ஆவது முறையாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்!! 5-ஆவது முறை சிக்கியது எப்படி?!

சிங்கப்பூருக்குள் 5-ஆவது முறையாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்!! 5-ஆவது முறை சிக்கியது எப்படி?!

இந்தோனேஷியாவின் பாத்தாமிலிருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 26 வயதான இந்தோனேஷியாவை சேர்ந்த நபரை அதிகாரிகள் மார்ச் மாதம் கைது செய்தனர்.

சிங்கப்பூருக்குள் ஐந்தாவது முறை சட்டவிரோதமாக நுழைய முயன்ற அந்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 9 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டிலிருந்து அவர் 4 முறை சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்கு ஒவ்வொரு முறையும் அந்த நபருக்கு சிறைத்தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டில் இருந்து அந்த நபர் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த நபர் 2023ஆம் ஆண்டு பாத்தாமில் இருந்து சிங்கப்பூருக்கு கடலில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் கடற்கரைக்கு அருகே வந்தவுடன் படகை கடலிலேயே விட்டுவிட்டு அவர் கரைக்கு நீந்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான உரிய பயண ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் அதிகாரிகளிடம் பிடிபடும் வரை சட்ட விரோதமாக கிட்டத்தட்ட 9 மாதங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் .