சிங்கப்பூரில் மோசடி தடுப்பு கழகத்தியம் மோசடி அச்சுறுத்தல்களைத் துடைத்தொழிக்கவும், புதிய யுக்திகளை வகுக்கவும்,அரசாங்கம் மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் வலுப்படுத்தும் முயற்சியில் மோசடி தடுப்பு கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் எல்லை தாண்டி எழுபதிற்கும் மேற்பட்ட மோசடி கும்பல் பிடிப்பட்டனர்.நம்பிக்கை அளிக்கும் இந்த கூட்டில் மேலும் முன்னேறி செல்ல கூடுதல் தேவை என்று மோசடி தடுப்பு கழகம் குறிப்பிட்டது.
சமூக ஊடகங்களில் மூலம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. மின் வழிப்பறியும்,மின் வணிக மோசடியும் அதிக அளவில் நடப்பதாக குறிப்பிடுகின்றனர்.
வருங்காலத்தில் அரசாங்கத்தின் முக்கிய அமைப்புகளுடன் அனைத்து உறவுகளும் மேலும் வலுப்படுத்த படும் என்று கழகத்தின் உதவி இயக்குனர் எலினியா கூறினார். அதை தவிர வங்கிகள்,இணைய சந்தைகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து செயல்பட்டு மோசடிகளைத் தடுக்கும் புதிய யுக்திகள் வகுக்கப்படும் என்றார்.“மோசடிகளுக்கு இலக்காக முடியாத தேசம்´´ என்று சாதிப்பதே கழகத்தின் இலக்கு.