சிங்கப்பூருக்கு அவசரப்பட்டு இப்போது செல்ல வேண்டாம்!!அதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூருக்கு அவசரப்பட்டு இப்போது செல்ல வேண்டாம்!!அதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூருக்கு சென்றால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நினைப்பவர்கள் இப்போது சிங்கப்பூர் செல்லாமல் இருப்பது நல்லது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு நிறைய காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவசரத்தினாலும் சென்று நிறைய பேர் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

கரணங்கள் :

1. அதிகமாக முன்பணம் கட்டுவது. தெரியாதவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு வேலைக்காக அதிக நாட்கள் காத்திருப்பது. குறிப்பாக ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக காத்திருந்தும் சிங்கப்பூர் செல்ல முடியாமல் எப்போது வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

2. உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தாலும் அது என்ன வேலை என்பது தெரியாமல், அதைப் பற்றிய முழு விவரமும் அறியாமல் நீங்கள் சிங்கப்பூர் செல்வது மிகவும் வருத்தத்திற்குரியது. இத்தகைய சூழ்நிலைகளை பலர் எதிர்கொண்டும் ஏமாந்தும் போயுள்ளனர்.

அதனால் நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு முன் உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது அங்கு வேலை பார்த்து கொண்டிருப்பவர்களிடம் நன்கு விசாரித்து செல்வது மிகவும் நல்லது.

அல்லது பணத்தை கட்டி அதிக நாட்கள் ஆகிவிட்டது என்பதனால் எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து அது என்ன வேலை என்று கூட தெரியாமல் நீங்கள் சிங்கப்பூர் சென்று கஷ்டபடுவதற்கு நீங்கள் இந்தியாவிலிருந்தே உங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு வேலையை செய்யலாம்.

பரவாயில்லை எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் நான் சமாளித்து விடுவேன் நான் சிங்கப்பூர் போயியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு :

அங்கு நிறைய வகையான வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு எது நன்றாக தெரியுமோ அந்த வேலைக்கு அதிகமாக முன் பணம் கட்டாமல் ,கம்பெனியைப் பற்றி நன்கு விசாரித்து, நீங்கள் யார் மூலம் செல்ல உள்ளீர்களோ அதாவது ஏஜென்ட் அவர்களைப் பற்றியும் நன்கு விசாரித்து செல்வது மிகவும் நல்லது.

அதிகமாக பணத்தை கட்டி ஏமாறுவது, உங்களுக்கான சரியான வேலை கிடைக்காதது, நீங்கள் சிங்கப்பூரில் பணி புரிய போகும் வேலையை பற்றி முன் அனுபவம் இல்லாமல் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நீங்கள் சிங்கப்பூர் சென்று கஷ்டப்படுவதற்கான கரணங்கள்.

இது போன்ற கரணங்கள் அல்லது பிரச்சனைகளில் சிக்கி கொள்ளாமல் அனைத்தும் சரியாக அமைந்தால் நீங்கள் சிங்கப்பூர் செல்லலாம்.