Singapore news

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த இளம்பணி பெண்ணை இறக்கும் வரை துன்புறுத்தியவர்களுக்கு தண்டனை!

சிங்கப்பூரில் பணி பெண்களை துன்புறுத்தும் சம்பவங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. காவல்துறையில் புகார்களும் வந்து கொண்டு தான் இருக்குகிறது.ஆனால்,இந்த சம்பவம் வீட்டு வேலை செய்யும் பணி பெண்களிடம் மிகுந்த அச்சத்தைக் கொண்டு வருவதாக இருக்கிறது.

மியான்மரைச் சேர்ந்த பியாங் காய் டோன் என்ற 24 வயது இளம்பணி பெண் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் காவல்துறையினர் அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தது.60 வயது மதிக்கதக்க பிரேமாவின் மகள் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார் பியாங். பிரேமா மற்றும் பிரேமாவின் மகளுமான காயத்ரி ஆகிய இருவரும் பியாங் யை தொடர்ச்சியாக 14 மாதங்களாக துன்புறுத்தி உள்ளனர்.

இளம்பெண்ணை பல்வேறு வகையில் துன்புறுத்தியும் அவருக்கு போதிய உணவு அளிக்காமலும் அவர் இறக்கும் வரை அவரை துன்புறுத்தி உள்ளனர்.உதை, குத்து, மிதி மற்றும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தளுக்கு பியாங் ஆளாக்கப்பட்டுள்ளார்.அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் இரவெல்லாம் ஒரு சன்னல் கம்பியில் கட்டி வைத்துள்ளனர்.இளம்பணி பெண் மரணத்திற்கு காரணமாக இருந்த காயத்ரி முருகையனின் தாயாருக்கு சொந்த வீடும் இருந்துள்ளது.

பிரேமா தன் மகளுடன் வாரத்திற்கு 3 நாட்கள் தங்குவார். பியாங் தங்கியிருந்த அறையில் பிரேமாவும் தங்குவார். பியாங் தன் மகளால் துன்புறுத்த படுகிறார் என்று தெரிந்தும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். தன் மகளுடன் சேர்ந்து பியாங் யை துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.பியாங்யின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தன் சுயநினைவை இழந்துள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்களிடம் அவர்கள் உண்மையைக் கூறாமல் அதனை மறைத்து சேர்த்துள்ளனர்.இதற்கிடையில் தலையில் பலத்த காயம் இருந்ததால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூளையில் பாதிப்பு மற்றும் உடல்ரீதியாக துன்புறுத்த பட்டதாலும் இளம்பணி பெண் உயிரிழந்தார். அவர் மரணத்திற்கு பின் காவல்துறை நடத்திய விசாரணையில் தன் மகளுடன் இளம்பணி பெண்ணை இறக்கும் வரை துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார் பிரேமா.அவர்கள் இளம்பெண் பியாங் யை துன்புறுத்திய நிகழ்வுகள் அங்கே உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை நீதிமன்றத்தில் சாட்சியாக காவல்துறை சமர்ப்பித்துள்ளது.இச்சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வழக்குகளில் இது மிக மோசமான ஒன்று என்றும் கூற படுகிறது.