சிங்கப்பூரில் நீங்கள் பணி புரியும் கம்பெனியில் எதிர்கொள்ளும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அப்படியென்றால் இப்பதிவு உங்களுக்கானது!!

சிங்கப்பூரில் நீங்கள் பணி புரியும் கம்பெனியில் எதிர்கொள்ளும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அப்படியென்றால் இப்பதிவு உங்களுக்கானது!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதற்காக பெரும்பாலும் வேலை பார்க்கின்றனர்? அங்கு அவர்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே.

ஆனால்,சிங்கப்பூரில் ஒரு சில கம்பெனிகள் சம்பளத்தை கால தாமதமாக கொடுப்பதால் வீட்டிற்கு பணம் அனுப்புவது, சாப்பாட்டு செலவு உள்ளிட்ட நிறைய பிரச்சினைகளை வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.சிங்கப்பூரின் MOM விதிமுறைப்படி ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் சம்பளம் கொடுக்க வேண்டும்.

அப்படி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் MOM இல் சென்று புகார் அளிக்கலாம்.

64385122 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உங்களுக்கு உதவி புரிவார்கள்.அப்படி இல்லை என்றால் நேரில் சென்று கூட புகார்களை தெரிவிக்கலாம்.

MOM உங்களின் புகார் குறித்து மேல் விசாரணை செய்து உங்களுக்கு நல்ல தீர்வை அளிப்பார்கள்.