இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதற்கான தற்போதைய நிலை!!
நமது subscriber இந்தியாவில் டெஸ்ட் அடிப்பது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் தற்பொழுது எலக்ட்ரிகல் டெஸ்ட் அடித்து வருகிறார், தற்போது இந்தியாவில் Quota மிகவும் குறைவாக உள்ளது.அவர் பயிலும் டெஸ்ட் இன்ஸ்டியூட்டில் இரண்டு டிரேடுகள் மட்டுமே கற்று தரப்படுகிறது.
பைபர் மற்றும் எலக்ட்ரிகல் ஆகிய இரண்டு டிரெடுகளுக்கு மட்டுமே Quota உள்ளது. நான்கு Quota பைபர் டிரேடடுக்கும்,இரண்டு Quota எலெக்ட்ரிகல் டிரேடடுக்கும் உள்ளன. மொத்தம் ஆறு Quota மட்டுமே உள்ளது. அவர் பயிலும் இன்ஸ்டியூட்டில் மொத்தம் ஆறு பேர் மட்டுமே இருக்கிறதாக கூறினார். இதுதான் இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதற்கான தற்போதைய நிலை.
இந்தியாவில் இன்ஸ்டியூட்ஸ்களுக்கு மொத்தம் 10 Quota மட்டுமே தரப்படுகிறது.அதனால் காத்திருக்கும் நேரம் மிகவும் அதிகமாக உள்ளது.
குறைந்தது ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும்.அதனால் நிறைய பேர் வேறு வேலைக்கு சிங்கப்பூர் செல்கின்றனர்.
உதாரணமாக நோய் தொற்றுக்கு முன்பு 1000 முதல் 2000 பேர் மெயின் டெஸ்ட் அடித்தனர் .ஆனால் இப்பொழுது 6 பேர் முதல் 10 பேர் வரை மட்டுமே செல்ல முடிகிறது.
நீங்கள் டெஸ்ட் அடித்துதான் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் குறைந்தது ஒன்று முதல் இரண்டு வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
அதற்கு அதிக பணமும் செலவாகும்.
இதை தவிர்த்து வேறு எப்படி சிங்கப்பூர் செல்ல முடியுமா? என்று கேட்டால் அதற்கு பதில் முடியும். Pcm permit, Marine permit,NTS Permit,S – pass, E-pass போன்ற பெர்மிட்கள் மூலம் சிங்கப்பூருக்கு வரலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg